லிங்கம் என்றால் "SYMBOL", "குறியீடு" என்று பொருள்!
சிவ-லிங்கம் என்றால் சிவ-குறியீடு! Siva-Symbol! சிவபெருமானைக் குறிக்கும் சின்னம்!
படம் வரைந்து பாகங்களைக் "குறி" என்று சொல்லும் போது நமக்கு ஒன்னும் அப்படித் தோனுவதில்லையே! அப்புறம் ஏன் "லிங்கம்" என்று சொல்லும் போது மட்டும் இப்படி?
சிவ-லிங்கம் என்பது சிவ-குறியீடு! இதுக்கு மேல சொல்லுறது எல்லாம் வெள்ளைக்காரவுங்களின் அதீதக் கற்பனை!
நாமளும் ஆங்கிலேய விளக்கத்தைக் கேட்டு விட்டு, விம் பவுடர், சபீனா பவுடர் போட்டு இன்னும் வெளக்கு வெளக்குன்னு வெளக்கிட்டோம்! :-)
சிவலிங்கம் பற்றிய ஒரு பொய்யை, ஓராயிரம் புத்தகமாப் போட்டு amazon.com-இல் துரைமார்களோ இல்லை நம்மூர் ஹை ப்ரொஃபைல் சாமியார்களோ வெளியிட்டுருவாங்க! அதைப் படிச்சிட்டு, நமக்கே சந்தேகம் வரும் நிலை வந்துடிச்சிப் பார்த்தீங்களா? போதாக்குறைக்கு தமிழ் சினிமாவின் மகத்துவம்!
முதலிரவுக் காட்சிகளில்...அப்பிடீ ஒரு சைடுல...சிவலிங்கத்தைக் காட்டுவாங்க! எந்தப் படம்-பா அது? கார்த்திக்-ரஞ்சிதா-ஒரு வெள்ளைக்காரப் பொண்ணு லவ் ஸ்டோரி!
ரொம்ப அறிவாளித்தனமா, இலை மறை காய் மறையாச் சொல்லிட்டதா இயக்குனர் பெருமை பட்டுக்கிடுவாரு! நம்ம கமல் சாரும் இன்னும் சில இயக்குனர்களும் பல படங்களில் இந்த "டெக்னிக்"கைப் பயன்படுத்தி இருக்காங்க! :-)
சிவலிங்கம் பார்க்க "அப்பிடி" இருக்கோ இல்லையோ, இப்படிச் சொல்லிச் சொல்லி, "அப்பிடியே" பார்க்க நாமளும் பழகிக்கிட்டோம்!
அட ஆமாம்-ல! "அப்பிடித் தான்-ல" இருக்கு; நம்ம முன்னோர்கள் எல்லாரும் படா கில்லாடியா இருந்திருக்காங்கப்பா-ன்னு கல்லூரி நண்பர்கள் கூட நமட்டுச் சிரிப்பு சிரிச்சிக்கிட்டு டைம் பாஸ் ஆகும்! இத வச்சியே கல்லூரியில் கும்மி அடிக்கும் அதி தீவிர சிவபக்த குழாங்களும் உண்டு! :-)
சிவ-லிங்கம் என்றால் சிவக்-குறியீடு-ன்னு பார்த்தோம்!
ஏன் அப்படி ஒரு லிங்க வடிவம்? அந்த வடிவத்தில் என்ன தான் சொல்ல வராங்க என்பதைக் கொஞ்சம் எளிமையா, எல்லாருக்கும் புரியிறா மாதிரி பார்க்கலாமா இன்னிக்கி?
இறைவனைப் பரப்பிரம்மம் என்று சொல்வதுண்டு! எதையும் கடந்து நிற்பவன் பரம்=கடவுள்!
(உருவம் குணம் இதெல்லாம் கடந்து நிற்கும் போது நிர்க்-குணப் பிரம்மம்! உருவமாய், கண்ணுக்கு இனியவனாய்த் தோன்றும் போது ச-குணப் பிரம்மம்! )
ஹீரோ போல, முருகனும் கண்ணனும் அழகாகச் சிரித்தால் = உருவம்!
உருவமே இல்லாத, குறியீடே இல்லாத, ஏதோ ஒரு சக்தி நிலை = அருவம்!
உருவமும் இல்லை! அருவமும் இல்லை! அப்பிடின்னா அதுக்குப் பேரு என்னா? = அருவுருவம்!
சிவலிங்கம் என்பது அருவுருவம்!
உருவமாகப் பார்த்தால் இறைவனும் மனுசனைப் போலத் தான்! கை கால் காது மூக்கு-ன்னு எல்லாம் கடவுளுக்கும் இருக்கும் போல! காதுல பாட்டு கேப்பாரா? மூக்குல மூச்சு விடுவாரா-ன்னு நெனச்சிக்குவோம்!
"உருவம்-னா வெறும் மனுச உருவம் மட்டும் தானா? மரம், செடி, விலங்கு, பறவை எல்லாம் கூட உருவம் தான்! அந்த உருவத்துல எல்லாம் கடவுள் இருக்க மாட்டாரா?"-ன்னு சில பேரு குறுக்குக் கேள்வி கேப்பாங்க!
ஹிஹி! அதான் தண்டகாரண்யத்து மரமாய், மீனமாய், ஆமையாய், வராகமாய், நரசிம்மமாய், வாமன-ராம-கண்ணன்னு மனுசன்களாய் பல உருவத்தில் இறைவனைக் காட்டினாங்க!
உருவமே கெடையாதுன்னு சொல்லுறத நம்புறதா?
உருவமா இருக்குறத நம்புறதா? எதைப்பா நம்புறது?
ஹிஹி! கேள்வி எல்லாம் நல்லாத் தான் கேக்குறீங்க! கேள்விக்குப் பதில், இன்னொரு கேள்வி தான்!
தண்ணி உருவமா? அருவமா? இதுக்குப் பதில் சொல்லுங்க பார்ப்போம்!
நீராவியா இருந்தா = அருவம்! கண்ணுக்குத் தெரியாது!
பாத்திரத்துல புடிச்சி வச்சா = உருவம்! கண்ணுக்குத் தெரியும்!
எந்தப் பாத்திரத்துல தண்ணியைப் பிடிக்கறோமோ, அந்த உருவத்தையே தண்ணியும் எடுத்துக்குது-ல்ல? அதே போலத் தான் இறைவனும்!
இறைவன் நீரைப் போலவே அருவமாகவும் இருக்கிறான்! பிடித்து வைத்த பாத்திரத்தில் உருவமாகவும் இருக்கிறான்!
இறைவன் உருவமாய் இருக்கலாம்! ஆனால் உருவம் மட்டுமே இறைவன் இல்லை!
இறைவன் அருவமாய் இருக்கலாம்! ஆனால் அருவம் மட்டுமே இறைவன் இல்லை!
இதை அவ்வப்போது நாம் உணர்ந்து கொள்ளணும்! அதுக்குத் தான் உருவமும் இல்லாத, அருவமும் இல்லாத....அருவுருவம் என்னும் ஒரு குறியீடு!
வைணவ ஆலயங்களில் தீர்த்தம் என்பது ஒரு அருவுருவம்!
அதே போல் சைவ ஆலயங்களில் லிங்கம் என்பது அருவுருவம்!
லிங்க உருவத்தைச் சற்று நேரம் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருங்கள்! மனம் குவியும்! அதன் Geometry அப்படி! எப்படி மேலைநாடுகளில் Crystal Gazing-இல் மனத்தை ஒருமைப்படுத்துகிறார்களோ, அதே போல் வழிபாடு/தியான முறைகளுக்குப் பயன்படுத்துவதற்கு என்றே சிவலிங்க உருவம் நம் பண்பாட்டில் அமையப் பெற்றது!
சிவபெருமான், யோகி மற்றும் குரு வடிவானவர்! எனவே அவரைக் குறிக்கும் லிங்கமும் யோகம் மற்றும் தியான வடிவமாக இருக்கு!
லிங்கம்=லிங்+கம்
லிங்=லியதே=எல்லாப் பொருளும் அங்கு லயிப்பது, ஒன்றுபடுவது! (merge)
கம்=கமயதே=எல்லாப் பொருளும் அங்கிருந்தே எழுவது! (emerge)
இப்படி merge-emerge, ஒடுங்கி-எழுவது தான் சிவலிங்க சொரூபம்!
சிவலிங்கம் பற்றிய பல குறிப்புகள் லிங்க புராணத்தில் சொல்லப்படுகின்றன. சிவ புராணம், ஸ்கந்த புராணம் எல்லாவற்றிலும் லிங்கம் குறித்த கதைகள் உள்ளன.
துர்வாச முனிவரின் சாபத்தினால் ஈசனுக்கு உருவம் இல்லாத லிங்க வழிபாடு,
ப்ரம்மனும் விஷ்ணுவும் அடி முடி காணாத அளவுக்கு ஓங்கிய தீப்பிழம்பு தான் லிங்க உருவம் ஆனது என்று பல கதைகள் வழங்கினாலும்,
அனைத்திலுமே லிங்கம் என்பது மிக உயர்ந்த அருவுருவக் குறியீடு என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை!
பிரதானம் பிரகருதிர் யதாஹுர் லிங்கம் உத்தமம்
கந்த, வர்ண, ரசாஹிர், சப்த, ஸ்பரிசதி வர்ஜிதம்
வாசனை, நிறம், சுவை, ஓசை, தீண்டல் என்று எல்லாம் கடந்த குறியீடாகச் சிவலிங்கத்தைச் சொல்கிறது!
திருமூலர் லிங்க வடிவம் ஏன் என்பதைப் பல அழகிய தமிழ்ப் பாடல்களில் விளக்குகிறார்!
இலிங்கம தாவது யாரும் அறியார்
இலிங்கம தாவது எண்டிசை எல்லாம்
இலிங்கம தாவது எண்ணெண் கலையும்
இலிங்கம தாக எடுத்தது உலகே!
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம், கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே என்பது புகழ் பெற்ற திருமந்திரம்!
இது வரைக்கும் புரிஞ்சுதோ புரியலையோ, சிவலிங்கம் "அதை"க் குறிக்கவில்லை என்பது மட்டுமாவது புரிஞ்சிருக்கும்-னு நினைக்கிறேன்! :-)
அய்யம்பேட்டையில் இருந்து சுவாமிநாதன்
Saturday, May 9, 2009
Monday, April 13, 2009
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
என் உளம்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த இனிய தமிழ் புத்தாண்டு நன்னாளில் இல்லல் நீக்கி, மகிழ்ச்சி பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.
Labels:
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Thursday, February 5, 2009
நிம்மதியாக வாழ்வதற்கான சில வழிமுறைகள்
* மற்றவர்கள் எதிர்பார்ப்பதைவிட நிறைவாகவும், அன்புடனும் செய்திடுங்கள்.
* நீங்கள் எழுதிய முதல் கவிதையை பாதுகாத்திடுங்கள்.
* மற்றவர்களுக்காக வாழ்ந்திடாமல் உங்களுக்காக வாழ்ந்திடுங்கள்.
* மற்றவர்களிடம் உண்மையான அன்புடன் பழகிடுங்கள்.
* உண்மையான அன்பில் நம்பிக்கை கொள்ளுங்கள்.
* அடுத்தவர்களின் கனவுகளை கேலி செய்யாதீர்கள்.
* அன்பு பல நேரங்களில் வருத்தமளித்தாலும், அன்பில்லாமல் வாழ முடியாது.
* நியாயத்திற்காக போராடுங்கள்.
* வேகமாக சிந்தித்திடுங்கள். ஆனால் நிதானமாக பேசிடுங்கள்.
* சாதனைகள் புரிவதற்கு முன்பு தடைகள் பல ஏற்படுவது இயல்பு.
* பெற்றோர்களுடன் தினமும் சிறிது நேரம் செலவிடுங்கள்.
* உறவுகளை மிகவும் கவனத்துடன் கையாளுங்கள்.
* உங்களுடைய தவறுகளுக்காக வருந்துங்கள்; உணர்ந்து திருந்திடுங்கள்.
* நீங்கள் விரும்புகிறவர்களை மணப்பதைவிட உங்களை விரும்புகிறவரை மணந்திடுங்கள்.
* உங்களுக்கென தினமும் சிறிது நேரம் செலவிடுங்கள்.
* எக்காரணத்திற்காகவும் உங்களுடைய சுயமரியாதையை இழக்காதீர்கள்.
* சில கேள்விகளுக்கு மவுனமே சிறந்த பதில்.
* நிறைய புத்தகங்களை வாசித்திடுங்கள்.
* அன்பான சூழ்நிலையில் வாழ்ந்திடுங்கள்.
* கடந்த கால வாழ்க்கையை மறந்து நிகழ்காலத்தில் வாழப் பழகுங்கள்.
* எந்த ஓரு சூழ்நிலையிலும் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுங்கள்.
* உங்கள் எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து வாழ்ந்திடுங்கள்
* பண்புடன் வாழுங்கள்.
* துயரமான நாள்களில் கடவுளை நம்புங்கள். அவரால் மாற்ற முடியாதது எதுவுமில்லை
வலை பக்கத்தில் படித்தது....

Saturday, November 15, 2008
Monday, September 10, 2007
நண்பர்களுக்காக...
எனது முதல் தமிழ் வலையை, என் அனைத்து நண்பர்களுக்கும் அனுப்பி வைத்தேன், அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சி, அனைவரும் எனக்கு வாழ்த்து தெறிவித்தார்கள், இதில் கார்த்தி, முத்துக்குமரன் மற்றும் செந்தில், எனது வலைப்பக்கத்திலேயே தம்தம் கருத்தை தெறிவித்து இருந்தார்கள், அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெறிவித்துக்கொள்கிறேன்.
இதில் பெரும்பலான நண்பர்கள் தமிழில் வலை அமைப்பது எப்படி என்று வினவினார்கள்,
அவர்களுக்காக, இந்த கட்டுரையை வெளியிடுகின்றேன்.
தமிழில் வலை அமைப்பது எப்படி? மிகச்சாதாரணம் தான், இதோ எனக்கு தெரிந்த நடையில் எழுதியிருக்கின்றேன். விளக்கம் பின்வருமாறு,...
1. தங்களுக்கு ஜிமெயிலில் ஒரு வலையஞ்சல் கணக்கு இருக்க வெண்டும்.
2. பிறகு தங்களுக்கு ஒரு வலை ஏற்படுத்த வேண்டும், அதற்க்கு பிலாக் ச்பாட்டு என்ற வலைக்கு போய் தங்கள் ஜிமெயில் வலையஞ்சல் கணக்கை வைத்து உள்ளே செல்லுங்கள் பிறகு அங்கே கொடுக்கப்பட்டுள்ள இடத்தில், தங்கள் வலையின் பெயர், மற்றும் வேண்டிய உள்ளீடுகளை அளியுங்கள்...
3. இதோ இந்த ஒலியும் ஒளியும் உங்களுக்கு துணை புரியும்.
4. பிறகு உங்கள் வலை பதிவை தமிழில் பயன்படுத்த ஈக்கலப்பையை பயன்படுத்துங்கள்
5. இதை பயன்படுத்தி தமிழ் பரப்புங்கள்... வாழ்க தமிழ்... வளர்க தமிழ்...
6. தங்கள் வலைத்தோற்றத்தை மாற்ற இங்கே சொடுக்குங்கள் தங்களுக்கு தேவையான தோற்றத்தை தேர்ந்தெடுத்து வலையை தோற்றுவிய்யுங்கள்...
7. தமிழ் வலைப்பக்கம் தயார்...
இந்தக்கட்டுரையில் ஏதேனும் பிழை இருந்தால், உடனே தெரிய படுத்துங்கள் திருத்திக்கொள்கின்றேன்...

create a tamiz blog
Sunday, September 9, 2007
முதல் கட்டுரை
அனைவருக்கும் வணக்கம்,
இது என்னுடைய முதல் தமிழ் வலை...
இதை அமைக்க எனக்கு அருள் புரிந்த என் இறைவனுக்கு முதற்க்கண் வணக்கம்...
என் தாய், தந்தைக்கும் வணக்கம்...
மற்றும் தமிழில் எழுத உதவி புரிந்த முத்துக்குமரன் அவர்களுக்கும் எனது நன்றி...
வாழ்க தமிழ்...
தமிழ் வளர்ந்து கொண்டே இருக்கும்...

Subscribe to:
Posts (Atom)