Posts

சிவலிங்க தத்துவம் !!!

லிங்கம் என்றால் "SYMBOL", "குறியீடு" என்று பொருள்! சிவ-லிங்கம் என்றால் சிவ-குறியீடு! Siva-Symbol! சிவபெருமானைக் குறிக்கும் சின்னம்! படம் வரைந்து பாகங்களைக் "குறி" என்று சொல்லும் போது நமக்கு ஒன்னும் அப்படித் தோனுவதில்லையே! அப்புறம் ஏன் "லிங்கம்" என்று சொல்லும் போது மட்டும் இப்படி? சிவ-லிங்கம் என்பது சிவ-குறியீடு! இதுக்கு மேல சொல்லுறது எல்லாம் வெள்ளைக்காரவுங்களின் அதீதக் கற்பனை! நாமளும் ஆங்கிலேய விளக்கத்தைக் கேட்டு விட்டு, விம் பவுடர், சபீனா பவுடர் போட்டு இன்னும் வெளக்கு வெளக்குன்னு வெளக்கிட்டோம்! :-) சிவலிங்கம் பற்றிய ஒரு பொய்யை, ஓராயிரம் புத்தகமாப் போட்டு amazon.com-இல் துரைமார்களோ இல்லை நம்மூர் ஹை ப்ரொஃபைல் சாமியார்களோ வெளியிட்டுருவாங்க! அதைப் படிச்சிட்டு, நமக்கே சந்தேகம் வரும் நிலை வந்துடிச்சிப் பார்த்தீங்களா? போதாக்குறைக்கு தமிழ் சினிமாவின் மகத்துவம்! முதலிரவுக் காட்சிகளில்...அப்பிடீ ஒரு சைடுல...சிவலிங்கத்தைக் காட்டுவாங்க! எந்தப் படம்-பா அது? கார்த்திக்-ரஞ்சிதா-ஒரு வெள்ளைக்காரப் பொண்ணு லவ் ஸ்டோரி! ரொம்ப அறிவாளித்தனமா, இலை மறை காய் மறையாச் சொல்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

என் உளம்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த இனிய தமிழ் புத்தாண்டு நன்னாளில் இல்லல் நீக்கி, மகிழ்ச்சி பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.

நிம்மதியாக வாழ்வதற்கான சில வழிமுறைகள்

* மற்றவர்கள் எதிர்பார்ப்பதைவிட நிறைவாகவும், அன்புடனும் செய்திடுங்கள். * நீங்கள் எழுதிய முதல் கவிதையை பாதுகாத்திடுங்கள். * மற்றவர்களுக்காக வாழ்ந்திடாமல் உங்களுக்காக வாழ்ந்திடுங்கள். * மற்றவர்களிடம் உண்மையான அன்புடன் பழகிடுங்கள். * உண்மையான அன்பில் நம்பிக்கை கொள்ளுங்கள். * அடுத்தவர்களின் கனவுகளை கேலி செய்யாதீர்கள். * அன்பு பல நேரங்களில் வருத்தமளித்தாலும், அன்பில்லாமல் வாழ முடியாது. * நியாயத்திற்காக போராடுங்கள். * வேகமாக சிந்தித்திடுங்கள். ஆனால் நிதானமாக பேசிடுங்கள். * சாதனைகள் புரிவதற்கு முன்பு தடைகள் பல ஏற்படுவது இயல்பு. * பெற்றோர்களுடன் தினமும் சிறிது நேரம் செலவிடுங்கள். * உறவுகளை மிகவும் கவனத்துடன் கையாளுங்கள். * உங்களுடைய தவறுகளுக்காக வருந்துங்கள்; உணர்ந்து திருந்திடுங்கள். * நீங்கள் விரும்புகிறவர்களை மணப்பதைவிட உங்களை விரும்புகிறவரை மணந்திடுங்கள். * உங்களுக்கென தினமும் சிறிது நேரம் செலவிடுங்கள். * எக்காரணத்திற்காகவும் உங்களுடைய சுயமரியாதையை இழக்காதீர்கள். * சில கேள்விகளுக்கு மவுனமே சிறந்த பதில். * நிறைய புத்தகங்களை வாசித்திடுங்கள். * அன்பான சூழ்நிலையில் வாழ்ந்திடுங்கள். * கடந்த க

மனிதநேயம் என்றால் என்ன?

Image
மனிதநேயம், மனிதாபிமானம் என்றால் என்ன? யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்...

நண்பர்களுக்காக...

எனது முதல் தமிழ் வலையை, என் அனைத்து நண்பர்களுக்கும் அனுப்பி வைத்தேன், அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சி, அனைவரும் எனக்கு வாழ்த்து தெறிவித்தார்கள், இதில் கார்த்தி, முத்துக்குமரன் மற்றும் செந்தில், எனது வலைப்பக்கத்திலேயே தம்தம் கருத்தை தெறிவித்து இருந்தார்கள், அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெறிவித்துக்கொள்கிறேன். இதில் பெரும்பலான நண்பர்கள் தமிழில் வலை அமைப்பது எப்படி என்று வினவினார்கள், அவர்களுக்காக, இந்த கட்டுரையை வெளியிடுகின்றேன். தமிழில் வலை அமைப்பது எப்படி? மிகச்சாதாரணம் தான், இதோ எனக்கு தெரிந்த நடையில் எழுதியிருக்கின்றேன். விளக்கம் பின்வருமாறு,... 1. தங்களுக்கு ஜிமெயிலில் ஒரு வலையஞ்சல் கணக்கு இருக்க வெண்டும். 2. பிறகு தங்களுக்கு ஒரு வலை ஏற்படுத்த வேண்டும், அதற்க்கு பிலாக் ச்பாட்டு என்ற வலைக்கு போய் தங்கள் ஜிமெயில் வலையஞ்சல் கணக்கை வைத்து உள்ளே செல்லுங்கள் பிறகு அங்கே கொடுக்கப்பட்டுள்ள இடத்தில், தங்கள் வலையின் பெயர், மற்றும் வேண்டிய உள்ளீடுகளை அளியுங்கள்... 3. இதோ இந்த ஒலியும் ஒளியும் உங்களுக்கு துணை புரியும். 4. பிறகு உங்கள் வலை பதிவை தமிழில் பயன்படுத்த ஈக்கலப்பையை பயன்பட

முதல் கட்டுரை

அனைவருக்கும் வணக்கம், இது என்னுடைய முதல் தமிழ் வலை... இதை அமைக்க எனக்கு அருள் புரிந்த என் இறைவனுக்கு முதற்க்கண் வணக்கம்... என் தாய், தந்தைக்கும் வணக்கம்... மற்றும் தமிழில் எழுத உதவி புரிந்த முத்துக்குமரன் அவர்களுக்கும் எனது நன்றி... வாழ்க தமிழ்... தமிழ் வளர்ந்து கொண்டே இருக்கும்...