நண்பர்களுக்காக...
எனது முதல் தமிழ் வலையை, என் அனைத்து நண்பர்களுக்கும் அனுப்பி வைத்தேன், அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சி, அனைவரும் எனக்கு வாழ்த்து தெறிவித்தார்கள், இதில் கார்த்தி, முத்துக்குமரன் மற்றும் செந்தில், எனது வலைப்பக்கத்திலேயே தம்தம் கருத்தை தெறிவித்து இருந்தார்கள், அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெறிவித்துக்கொள்கிறேன். இதில் பெரும்பலான நண்பர்கள் தமிழில் வலை அமைப்பது எப்படி என்று வினவினார்கள், அவர்களுக்காக, இந்த கட்டுரையை வெளியிடுகின்றேன். தமிழில் வலை அமைப்பது எப்படி? மிகச்சாதாரணம் தான், இதோ எனக்கு தெரிந்த நடையில் எழுதியிருக்கின்றேன். விளக்கம் பின்வருமாறு,... 1. தங்களுக்கு ஜிமெயிலில் ஒரு வலையஞ்சல் கணக்கு இருக்க வெண்டும். 2. பிறகு தங்களுக்கு ஒரு வலை ஏற்படுத்த வேண்டும், அதற்க்கு பிலாக் ச்பாட்டு என்ற வலைக்கு போய் தங்கள் ஜிமெயில் வலையஞ்சல் கணக்கை வைத்து உள்ளே செல்லுங்கள் பிறகு அங்கே கொடுக்கப்பட்டுள்ள இடத்தில், தங்கள் வலையின் பெயர், மற்றும் வேண்டிய உள்ளீடுகளை அளியுங்கள்... 3. இதோ இந்த ஒலியும் ஒளியும் உங்களுக்கு துணை புரியும். 4. பிறகு உங்கள் வலை பதிவை தமிழில் பயன்படுத்த ஈக்கலப்பையை பயன்பட...