நிம்மதியாக வாழ்வதற்கான சில வழிமுறைகள்
* மற்றவர்கள் எதிர்பார்ப்பதைவிட நிறைவாகவும், அன்புடனும் செய்திடுங்கள். * நீங்கள் எழுதிய முதல் கவிதையை பாதுகாத்திடுங்கள். * மற்றவர்களுக்காக வாழ்ந்திடாமல் உங்களுக்காக வாழ்ந்திடுங்கள். * மற்றவர்களிடம் உண்மையான அன்புடன் பழகிடுங்கள். * உண்மையான அன்பில் நம்பிக்கை கொள்ளுங்கள். * அடுத்தவர்களின் கனவுகளை கேலி செய்யாதீர்கள். * அன்பு பல நேரங்களில் வருத்தமளித்தாலும், அன்பில்லாமல் வாழ முடியாது. * நியாயத்திற்காக போராடுங்கள். * வேகமாக சிந்தித்திடுங்கள். ஆனால் நிதானமாக பேசிடுங்கள். * சாதனைகள் புரிவதற்கு முன்பு தடைகள் பல ஏற்படுவது இயல்பு. * பெற்றோர்களுடன் தினமும் சிறிது நேரம் செலவிடுங்கள். * உறவுகளை மிகவும் கவனத்துடன் கையாளுங்கள். * உங்களுடைய தவறுகளுக்காக வருந்துங்கள்; உணர்ந்து திருந்திடுங்கள். * நீங்கள் விரும்புகிறவர்களை மணப்பதைவிட உங்களை விரும்புகிறவரை மணந்திடுங்கள். * உங்களுக்கென தினமும் சிறிது நேரம் செலவிடுங்கள். * எக்காரணத்திற்காகவும் உங்களுடைய சுயமரியாதையை இழக்காதீர்கள். * சில கேள்விகளுக்கு மவுனமே சிறந்த பதில். * நிறைய புத்தகங்களை வாசித்திடுங்கள். * அன்பான சூழ்நிலையில் வாழ்ந்திடுங்கள். * கடந்த க...