சிவலிங்க தத்துவம் !!!
லிங்கம் என்றால் "SYMBOL", "குறியீடு" என்று பொருள்! சிவ-லிங்கம் என்றால் சிவ-குறியீடு! Siva-Symbol! சிவபெருமானைக் குறிக்கும் சின்னம்! படம் வரைந்து பாகங்களைக் "குறி" என்று சொல்லும் போது நமக்கு ஒன்னும் அப்படித் தோனுவதில்லையே! அப்புறம் ஏன் "லிங்கம்" என்று சொல்லும் போது மட்டும் இப்படி? சிவ-லிங்கம் என்பது சிவ-குறியீடு! இதுக்கு மேல சொல்லுறது எல்லாம் வெள்ளைக்காரவுங்களின் அதீதக் கற்பனை! நாமளும் ஆங்கிலேய விளக்கத்தைக் கேட்டு விட்டு, விம் பவுடர், சபீனா பவுடர் போட்டு இன்னும் வெளக்கு வெளக்குன்னு வெளக்கிட்டோம்! :-) சிவலிங்கம் பற்றிய ஒரு பொய்யை, ஓராயிரம் புத்தகமாப் போட்டு amazon.com-இல் துரைமார்களோ இல்லை நம்மூர் ஹை ப்ரொஃபைல் சாமியார்களோ வெளியிட்டுருவாங்க! அதைப் படிச்சிட்டு, நமக்கே சந்தேகம் வரும் நிலை வந்துடிச்சிப் பார்த்தீங்களா? போதாக்குறைக்கு தமிழ் சினிமாவின் மகத்துவம்! முதலிரவுக் காட்சிகளில்...அப்பிடீ ஒரு சைடுல...சிவலிங்கத்தைக் காட்டுவாங்க! எந்தப் படம்-பா அது? கார்த்திக்-ரஞ்சிதா-ஒரு வெள்ளைக்காரப் பொண்ணு லவ் ஸ்டோரி! ரொம்ப அறிவாளித்தனமா, இலை மறை காய் மறையாச் சொல்...